புதுக்கோட்டை சித்தன்னவாசல் பூங்கா வளாகத்தில் உலக நாடக தின விழா நடைபெற்றது, உலக நாடக தின விழாவினை முன்னிட்டு திருச்சி கலை பண்பாட்டுத்துறை, மண்டலக் கலை பண்பாட்டுமையம் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலமேகன்உதவி இயக்குநர். (பொ) தலைமை தாங்கினார், அன்னவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆணையர் எம். பிரேமாவதி அனைவரையும் வரவேற்றார்.
வட்டார வளர்ச்சி அலுவலகம் கிராம ஊராட்சிஆணையர் ஆர்.ஆனந்தன் மற்றும் புதுக்கோட்டை ஒவியக் கலைஞர் எம்.அய்யப்பா வாழ்த்துரை வழங்கினார், விழாவில் திருச்சி. எம். எஸ். முகமது மஸ்தானின் இந்தியத்தாயே உனக்காக என்ற நாடகமும் புதுக்கோட்டை ஜெய சண்முகராஜா குழுவினர் வள்ளி திருமணம் என்ற நாடகமும் நடைபெற்றது, விழாவில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர், புதுக்கோட் டை ஒவியக் கலைஞர் எம்.ராஜப்பா நன்றி உரை ஆற்றினார்.