
புதுக்கோட்டை நகரம் திருவப்பூர் 24வது வட்டம் சார்பில் பொன்னப்பன் ஊரணியை தூய்மைப் படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி், சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்வின் போது அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்திடம் 100 மரக் கூண்டுகள் கேட்டு கோரிக்கை மனுவினை அளித்தனர். அதனை செயலாளர் தங்கராஜா, சங்க பட்டய தலைவரும் நகர கழகச் செயலாளருமான க.நைனா முஹம்மது, ரோட்டரி மாவட்ட 3000ன் புதிய சங்க விரிவாக்க இயக்குனர் மாருதி கண.மோகன்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், பாலு, நிஜாம் முகம்மது, முகம்மது ஆசாத், காசிவிஸ்வநாதன், முத்துச்செல்வன், அசோகன், ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.