புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவராக சிவக்குமார், செயலாளராக செந்தில்வேல், பொருளாளராக முகமது அப்துல்லா ஆகியோருக்கு 24-25 ஆம் ஆண்டு ரோட்டரி மாவட்ட 3000 தின் ஆளுநர் இரா.ராஜா கோவிந்தசாமி பணியேற்பு விழாவினை நடத்தி வைத்தார்.
சங்கத் தலைவர் மாரிமுத்து முன்னதாக வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும்மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதுக்கோட்டை நகராட்சிக்கு குப்பை கூண்டினை வழங்க அதை நகராட்சி ஆணையர் மற்றும் நகர்நல அலுவலர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கல்லூரியில் பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் பியூலா என்ற மாணவிக்கு காது கேட்கும் கருவி, பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்ற தங்க மங்கை அனுராதாவிற்கு சாதனையாளர் விருது, புதுக்கோட்டையில் குருதிக்கூடு என்ற அமைப்புக்கு குருதிக்கொடையாளர் விருது, கல்வி உதவித் தொகையாக 2 மாணவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம், துப்புரவு பணியாளர்கள் 9 பேருக்கு இலவச வேட்டி சேலை, கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏழு பேருக்கு புத்கப் பை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ராகவன் என்ற மாணவன் 500/493 மார்க் எடுத்து மாவட்டத்தில் முதலிடம் வகித்ததை பாராட்டி சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது. ரோட்டரி பிளாஸம் மாணவன் விக்னேஷ் குமார் என்பவருக்கு சைக்கிள் வாங்கித்தருவதாக தருவதாக அமைச்சர் உறுதி கூறி சிறப்புரை வழங்கினார்.
நிகழ்வில் மண்டல செயலாளர் பாண்டியன், துணை ஆளுநர்லூர்துநாதன், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து ரோட்டரி பின் அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மண்டல செயலாளர் கண.மோகன்ராஜா, பட்டய செயலாளர் க.நைனா முகம்மது, வழக்கறிஞர் சந்திரசேகரன், தனகோபால் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் பார்த்திபன், அழகப்பன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். சென்ற வருட அறிக்கையை தங்க ராஜாவும் ரோட்டரி பிரார்த்தனையை செல்வரத்தினம் ஆகியோர் வாசித்தார்கள்.சங்க செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.