புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி திருக்கோவிலில் மழைநீர் புகுந்தது நிரந்திரமாக தீர்வு கண்டால்தான் மழைநீர் உள்ளே வராமல் இருக்கும் பக்தர்கள்

புதுக்கோட்டையில் சில நாடகளாகவே பகல் முழுவதும் வெயில் சுட்டெரித்த நிலையில், மாலைநேரங்களில் மழைபெய்வது வாடிக்கையாக உள்ளது.அதன்படி நேற்று நகரின் பெரும்பாலான மழை பெய்தது. இதே போல், புறநகர் பகுதிகளிலும் பரவலாக கன  மழை கொட்டியது. பின்னர் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதேபோல்,பல பகுதிகளில்  தொடங்கிய சாரல் மழை, இரவிலும் நீடித்தது.

பல்லவன் குளம் முழுவதுமாக நிரம்பி தண்ணீர் சாந்தாரம்மன் கோவிலுக்குள் சூழ்ந்திருப்பதையும் கோவிலுக்குள் இருக்கும் தண்ணீரை பூ மார்க்கெட் வழியாக வெளியேற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுப்பட்டிருப்பதையும் காணலாம்

தொடர்ந்து கனமழை பெய்ததால் நகரில் பல்லவன் குளம் நிரம்பிவழிந்தது  குளத்தில்  மழைநீர் அதிகமானதால் சாந்தநாதசுவாமி திருக்கோவிலில் புகுந்தது இன்று காலையில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மழைநீர்புகுந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தனர். உடனடியாக நகராட்சி பணியாளர்கள் வருகைதந்து கோவிலில் மழைநீர் போகாமல் மணல் மூட்டை வைத்து தேக்கிவைத்தனர். பின்னர் மழைநீர் பூ மார்க்கெட்வழியாக வெளியே சென்றது.தொடர்ந்து இதுபோல் பலமுறை   சாந்தநாதசுவாமி கோவிலில் மழைநீர் புகுந்துகொண்டுதான் இருக்கிறது. நிரந்திரமாக  தீர்வு எடுத்தல் தான்  மழைநீர் உள்ளே வராமல் இருக்கும் என்பது அனைவருக்கும் நன்குதெரிந்திருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக அனைவரும் மவுனமாக உள்ளனர். மாவட்ட  நிர்வாகமோ உடனடியாக நிரந்தரமான நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது புதுக்கோட்டை நகரில் வசிக்கக்கூடிய மக்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது.  மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் மழை அவ்வப்போது பெய்து வருவதால் அங்குள்ள ஏரி, குளங்கள், நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =