புதுக்கோட்டை சமஸ்தான விடுதலை நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின் மக்கள் விடுதலை கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கசி.விடுதலைக்குமரன் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை சமஸ்தான விடுதலையின் 75 ஆம் ஆண்டு விழா, விடுதலைக்கு போராடிய புதுக்கோட்டையின் தந்தையாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வல்லத்தரசு பணிகளுக்கு பாராட்டு விழா மார்ச் மாதம் மூன்றாம் தேதி மாலை 4 மணியளவில் பிருந்தாவனம் அருகில் உள்ள மீனாட்சி மஹாலில் நடைபெற உள்ளது.
விழாவிற்கு மாவட்ட செயலாளர் வீரக்குமார் தலைமை வகிக்கிறார். தாலுகா செயலாளர் சந்திரசேகரன் வரவேற்புரையாற்றுகிறார், மைய குழு தோழர்கள் ராஜா, அருண்குமார், கணேசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச் செயலாளர் விடுதலைக்குமரன் தொடக்க உரையாற்றுகிறார். நிகழ்வில் புதுக்கோட்டை பாவணன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரிப்,அ.பெ.கா பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் ஜெயராமன், தேசிய தமிழ் இலக்கிய பேரவை தலைவர் ஆரோக்கியசாமி ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர் தாலுகா செயலாளர். கருப்பையா நன்றி உரையாற்றுகிறார்.

சமஸ்தான விடுதலை நாளான மார்ச் 3ஆம் தேதி 1948ஐ ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும். 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரையில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியின் முதல் உறுப்பினராக பணியாற்றி புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடியாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதுடன் செயல்படுத்தவும் உந்து சக்தியாக இருந்த வல்லத்தரசு புகழை போற்றி அடையாளப்படுத்தும் விதமாக அவர் பிறந்த ஊரான கொப்பம்பட்டியில் நினைவிடம் நினைவிடம் கட்ட வேண்டும், அஞ்சல் தலை வெளியிட வேண்டும், புதுக்கோட்டை நகர வடக்கு நுழைவாயிலில் அவருக்கு நினைவு வளைவு கட்ட வேண்டும், தெற்கு நான்காம் வீதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும், பிராமணரல்லாத முதல் வழக்கறிஞரான வல்லத்தரசுக்கு நீதிமன்ற வளாகத்தில் முழு உருவ சிலை அமைக்க வேண்டும், தமிழ் சமூக வரலாற்றில் ஒரே நேரத்தில் பிரிட்டிசாருக்கு எதிராகவும் மன்னர் ஆட்சிக்கு எதிராகவும் போராடிய வல்லத்தரசுவின் வாழ்க்கையை அனைத்து நிலை மாணவர்களுக்கும் பாடமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள இவர்கள் ஓவிய போட்டி கவிதை போட்டி பேச்சு போட்டிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளடா ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன முதல் பரிசாக ரூபாய் 3000 ரொக்க தொகை இரண்டாம் பரிசாக 2000 ரொக்க தொகை மூன்றாம் பரிசாக ஆயிரம் ரொக்க தொகை வழங்கப்பட இருக்கின்றது மேலும் விபரங்களுக்கு 9095710639-9445635983-9786441042 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்