புதுக்கோட்டை சமஸ்கிருத வித்தியாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவி சாதனை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்” யோனக்ஸ்” சன் ரைஸ் நடத்திய”தேசிய அளவிலான ” சப் ‘ஜூனியர் தரவரிசை,இறகு பந்து போட்டி”   நவம்பர் 1ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை அண்டர்”15 மாணவ, மாணவிகளுக்கும்’அண்டர்” 17 மாணவ ,மாணவிகளுக்கும்”போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து “வீரர்கள் வீராங்கனைகள்’   60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். அந்தப் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக புதுக்கோட்டை சமஸ்கிருத வித்தியாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா 15 வயதிற்குட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 16வது இடத்திற்கு முன்னேறி “முன் கால் இறுதிக்கு” தேர்வாகியுள்ளார்.

அவரை பள்ளிச் செயலர் விஜயகுமார் தொண்டைமான் நற்சான்றிதழ் கொடுத்து பாராட்டினார். மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சேகர், பயிற்சியாளர்  ராமன், பெற்றோர் ராஜா, தீபாலட்சுமி ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துராமலிங்கம் ஆகியோர் பாராட்டினார்கள்.