புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி செயலாளர் பி.கருப்பையா தலைமை தாங்கினார், பொருளாளர் ஆர்.எம்.வீ.கதிரேசன் முன்னிலை வகித்தார், முதல்வர் ஜீவானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார், அறங்காவலர் குழு உறுப்பினர் கே.ராஜகோபாலன், கல்வியியல் கல்லூரி முதல்வர் எம். இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியின் உதவிப் பேராசிரியர் விஜயசுந்தரி சிறப்பானதொரு சிறப்புரை ஆற்றினார், நிகழ்வில் வாரியத் தேர்வு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரிய, அலுவலர்களுக்கு நினைவு பரிசு நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது, நிகழ்வில் 450க்கும் மேற்பட்ட மாணவர்களும்,பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர், விழாவுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பி.திருமலை அரசன், நா.விக்னேஷ்வரன் தலைமையில் அலுவலர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர். நிறைவாக முதலாமாண்டு துறைத் தலைவர் நா.விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.