புதுக்கோட்டை குத்தூஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மார்ச் 18 ஆம் தேதி நாளை மறுநாள் சனிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
விழாவிற்கு என்.எம் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.கே.முகமது அலி தலைமை வகிக்கிறார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா, பிலாவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் விஜயரவி பல்லவராயர் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்குகின்றனர். மாவட்ட கலெக்டர் கவிதா ராமு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். கவிஞர் தங்கம்மூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். கல்வி நிறுவனத்தின் தாளாளர் எம்.முகமது ரியாலுதீன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி நிறுவனத்தில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.