புதுக்கோட்டை கீரை தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்கள் சார்பில் 74-வது குடியரசு தினவிழா நேற்று தேசியகொடியேற்றி கொண்டாடப்பட்டது. விழாவில் கீரை தமிழ்ச்செல்வன் கல்வி நிறுவனங்களின் தலைவர் கீரை தமிழ்இராஜா கொடியேற்றி இந்திய குடியரசு நாளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைபடுத்தியதையும், அச்சட்டத்தை கடமை அர்பணிப்போடு நாம் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்று வாழத்துரை கூறினார்.
நிறுவன செயலர் பீட்டர் குடியரசு தினத்திலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஜாதி, மதம், பேதமின்றி, ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இணைந்து நாட்டை நேசித்து உயர வைப்போம் என்று வாழ்த்து செய்தி தந்தார். செவிலியர் கல்லூரி முதல்வர் நிர்மலா மாணவிகளுக்கு வழங்கிய வாழ்த்து செய்தியில் ஒன்றுபட்ட இந்தியாவை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வது ஒவ்வொருவருடைய கடமையாகும் என்பதை இந்த தருணத்தில் உணர்ந்து சேர்ந்து செயல்படுங்கள் என்றார், குடியரசு தின விழாவிற்கு கல்வியியல் கல்லூரி உதவி பேராசியர் சரவணன் வரவேற்புரை வழங்கினார்.
மேலும் மாணவிகளின் பேச்சு, பாடல், கவிதை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவிலியர் கல்லூரி உதவிப்பேராசிரியர் விண்ணரசி நன்றியுரை ஆற்றியும், நிகழ்ச்சியினை உதவிபேராசிரியர் லூர்து மேரி ஒருங்கிணைத்து வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.