புதுக்கோட்டை கிளை இந்திய மருத்துவ சங்கத்தின் புதிய நிர்வாகிகள் .2023 ஆம் ஆண்டின் பதவி ஏற்பு விழா ஐ.எம்.ஏ அரங்கத்தில் சிறப்புடன் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில இந்திய மருத்துவ சங்கத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார், இந்திய மருத்துவ சங்கத்தின் புதுக்கோட்டை கிளையின் செயலாளர் டாக்டர் முகம்மது சுல்தான் அனைவரையும் வரவேற்றார், புதிய தலைவராக புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் ராமமூர்த்தி பணியில் அமர்த்தப்பட்டார்.
இந்நிகழ்வில் சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தலைவர் டாக்டர் சுவாமிநாதனை கிளை உறுப்பினர்கள் டாக்டர் சுப்பையா, டாக்டர் பார்த்தசாரதி, டாக்டர் சலீம், டாக்டர் ராஜா உள்ளிட்டவர்கள் பாராட்டினார்கள்.2023 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் தலைவராக டாக்டர் ராமமூர்த்தி, செயலாளராக டாக்டர் முகம்மது சுல்தான், நிதி செயலாளராக டாக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் செயற்குழு நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிர்வாகிகளை மூத்த மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன் வாழ்த்திப் பேசினார், நிகழ்வில்புதிய தலைவர் ராமமூர்த்தி தனது பல்வேறு செயல் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார், விழாவில் மகளிர் பிரிவு செயலாளர் டாக்டர் வெண்ணிலா பெரியசாமி சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய மருத்துவ சங்கத்தின் விழாக் குழுவின் சார்பாக கவுரவிக்கப்பட்டது, டாக்டர் பெரியசாமி புதிய கண்டு பிடிப்பான பெரிய முகக்கவசம் பற்றி திரை மூலம் விளக்கமளித்து பேசினார், நிறைவாக டாக்டர் சாமிநாதன் ஏற்புரை ஆற்றினார், இந்நிகழ்வில் பல்வேறு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்து கொண்ட அனைவருக்கும் டாக்டர் நவரத்தினசாமி நன்றி கூறினார்.