புதுக்கோட்டை ஆனந்தா பாக்கில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா

புதுக்கோட்டை ஆனந்தா பாக்(ஏ.எம்.ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நேற்று. நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஆனந்தா பாக் பொதுநலச்சங்கத்தின் தலைவர் சா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். இவ்விழாவையொட்டி நடைபெற்ற கோலப்போட்டி மற்றும் சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மற்றும் புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி இருவரும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

“இதுபோன்ற “சமய நல்லிணக்க பொங்கல்”  விழாக்கள் சமூக ஒற்றுமைக்கு மிக மிக அவசியமானதாகும். தொடர்ந்து இங்கே நடைபெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.”என்று தனது சிறப்புரையில் குறிப்பிட்டார் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா. இந்நிகழ்வில், நகர்மன்ற துணைத்தலைவர் எம்.லியாகத் அலி, நகர்மன்ற உறுப்பினர் லதா கருணாநிதி இருவரும் வாழ்த்துரை வழங்கினர். கோலப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு விநாயகா மெடிக்கல்ஸ் உரிமையாளர் புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். மேலும் பொதுநலச்சங்கத்தின் கெளரவத் தலைவர்கள்  பேரா.பொ.அண்ணாமலை, சௌந்தரராஜன், துணைத்தலைவர்கள் ரெங்கசாமி, முகமது உசேன், துணைச்செயலர்கள் வேழவேந்தன் , சையத் இப்ராகிம் பாபு, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னதாக பொதுநலச்சங்கத்தின் செயலாளர் சத்தியா வரவேற்புரையாற்றினார். நிறைவாக பொருளாளர் ரத்தினம் நன்றியுரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

96 − = 94