புதுக்கோட்டை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் மாணவர்களுக்கு  அனுமன் திருச்சபை சார்பில்  கல்வி விருது வழங்கும் விழா

புதுக்கோட்டை தெற்கு 4 -ஆம் வீதி மார்கெட் சந்திப்பிலுள்ள இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த  ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் திருச்சபை சார்பில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அரசு பொது தேர்வு ஏழுதிய   10 -ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிபாடு ஸ்ரீ லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப  பூஜையில் கலந்து கொண்ட  மாணவ, மாணவிகள் தேர்வில் சிறப்பாக மதிப்பெண் பெறுகின்றவர்களுக்கு அனுமன் திருச்சபையினர் சார்பில் தொடர்ந்த்து பல வருடமாக கல்வி விருது  வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி, இந்த ஆண்டும்  மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாடைபெற்றது. விழாவிற்க்கு பேராசிரியர்  மாலதி தலைமை தாங்கினார். கே.மணி குருக்கள்அனைவரையும் வரவேற்றார். கார்த்திக் மெஸ் மூர்த்தி மற்றும் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். திருக்கோகர்ணம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் லதா கந்தசாமி 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கும்  கல்வி விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்வில் திருக்கோகர்ணம் பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் சினிவாசன், ஜெ.ஜெ கல்லூரி பேராசிரியர் அனிதா,  மன்னர் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரன், பழனியப்பன், முருகேசன், லெட்சுமணன், மாணவ, மாணவிகளின் மற்றும் பெற்றோர்கள்  கலந்து கொண்டனர்.  விழா ஏற்பாடுகளை, அனுமன் திருச்சபை நிர்வாகிகள் சிறப்புடன் செய்தனர். ஆன்மிக நெறியாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 3