புதுக்கோட்டை அருகே சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மேல கொத்தமங்கலம்  மற்றும் சேந்தங்குடி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை  மேல கொத்தமங்கலம்,  இ சேவை மைய கட்டிடம்    மற்றும்  சேந்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் திருவரங்குளம் நடமாடும் மருத்துவமனை மற்றும் கொத்தமங்கலம், வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய சிறப்பு காய்ச்சல்  மருத்துவ முகாம், நடைபெற்றது. இம்முகாமில் மருத்துவ அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்மர்கள்,  பெரியவர்கள் ஆகியோர்க்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில்   ஊராட்சி மன்ற தலைவர் செல்வநாயகம்  ,  செவிலியர் எழிலரசி, வாகன ஓட்டுநர் கதிரவன், ஆய்வக நுட்புனர் தமிழ்ச்செல்வி, வாகன மற்றும் மருத்துவமனை உதவியாளர் முருகேசன், திருவரங்குளம் நடமாடும் மருத்துவமனை,  கொத்தமங்கலம் மற்றும் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய இடைநிலை சுகாதார செவிலியர் கவிநயா, சுகாதார தன்னார்வலர்கள் திவ்யா, சுதா, சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி, திருச்செல்வம், மணிகண்டன், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், புஷ்பலதா, தாமோதரன், லட்சுமண குமார், கோவிந்தராஜ், குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − = 11