புதுக்கோட்டை அருகே அருள்மிகு பழனி ஆண்டவர்  திருக்கோவிலுக்கு  திருமேனி அழைத்து வரும் விழா

புதுக்கோட்டை அருகிலுள்ள வாகவாசல், விஜயபுரம் கிராமத்தில் 300 வருட வரலாறு கொண்ட கிரமத்தில், அமைந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக  திருமயம் சாலையுள்ள  புலிவலம் ஆர்.எம்.ஆர் சிற்பக்கலை கூடத்திலிருந்து விஜயபுரம் அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவிலுக்கு பழனி ஆண்டவர்  சிலை திருமேனி அழைத்து வரும் விழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவினை , அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் ஆன்மீக சமூக சேவை அறக்கட்டளையின் தலைவர், நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்களோடு இணைந்து ஏற்பாடு செய்தனர்.

வருகின்ற 21.8.2022 அன்று அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் கும்பாபிஷேகம், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள் பஞ்சாயத்து தலைவர்கள் , மத்திய, மாநில அரசு அலுவலர்கள் , ஊர் பொதுமக்கள் , அனைவரும் கலந்து கொள்ள விழா வெகுசிறப்பாக நடைபெற உள்ளது என  விழாக்குழுத் தலைவர் தங்கராசு தெரிவித்தார். இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 89 = 98