புதுக்கோட்டை அரிமளம் மெர்க்குரி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது, விழாவிற்கு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் அசரப் அன்சாரி தலைமையேற்று வாழ்த்துரை வழங்கினார், சங்கத்தின் செயலாளர் முத்துகருப்பன் மற்றும் பொருளாளர் மேசியாசந்தோசம் முன்னிலை வகித்தார்,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் , லண்டன் லுக் பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, மருதம் பள்ளி தாளாளர் தமிழ்மாறன், எய்ம் பள்ளி தாளாளர் கந்தசாமி, கலைமகள் பள்ளி தாளாளர் பாண்டிதுரை, குழிபிறை ஸ்ரீமீனாட்சி பள்ளி தாளாளர் ராஜ் , புதுக்கோட்டை காமராஜபுரம் பாரதி பள்ளி ஆலோசகர் செல்வராஜ், ஆலவயல் தாய் தமிழ் பள்ளி தாளாளர் மாதவன், கட்டுமாவடி யேகோவாநிசி பள்ளி முதல்வர் பானுமதி ஆகியோர் விழாவில் பங்கு பற்று வாழ்த்துரை வழங்கி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த பொறியாளர் ராஜேந்திரன் கொரோனா காலத்திற்கு பிறகு குழந்தைகள் பராமரிப்பு பற்றியும் பெற்றோர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார், உணவு பாதுகாப்பு அலுவலர் ரெங்கசாமி ஊட்டச்சத்து உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது குறித்தும் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருள்கள் பற்றி பெற்றோர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளை வழங்கினார், .அதன் பிறகு கற்றலில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தலைவர் அசரப் அன்சாரி பரிசுகள் வழங்கி அம்மாணவர்களின் பெற்றோர்களையும் கெளரவித்தார்.
லக்கி கார்னர் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கு பள்ளி ஆலோசகர் பாலசுப்பிரமணியன் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தார், ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுபரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது, நிகழ்ச்சியை மேலும் சிறபிக்கும் வகையில் பங்கு பெற்ற பெற்றோர்கள் விருந்தினர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ஷ்டசாலியாக மூன்று பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது, நிகழ்ச்சிகளை ஹிந்தி ஆசிரியர் தர்மராஜ் மற்றும் யோகா ஆசிரியர் சோமசுந்தரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள், முன்னதாக விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் தாளாளர் ரமணன் வரவேற்றார், நிறைவாக பள்ளி முதல்வர் முத்துலெட்சுமி நன்றி கூறினார், விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.