புதுக்கோட்டை அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் குழு விளையாட்டு போட்டிக்கான  கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவிலான குழு போட்டிகள் நடத்துவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் புதுக்கோட்டை அரசு  முன் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை  அரசு முன் மாதிரி மேல்நிலைப் பள்ளி முதல்வரும் பழைய விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட செயலருமான சிவப்பிரகாசம் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளரும் விளையாட்டுப் போட்டி ஒருங்கிணைப்பாளருமான தங்கராஜ் வருகை புரிந்து கலந்து கொண்ட  உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும்  உடற்கல்வி ஆசிரியர்களுக்கு போட்டி நடத்துவது குறித்த ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு போட்டி இணை செயலர்களான உடற்கல்வி இயக்குனர் முத்து செல்லம் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.