
புதுக்கோட்டை மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியர் முருகப்பன் தலைமை தாங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியாதவது., தமிழக அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது மிகுந்த அக்கற கொண்டு பல்வேறு சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றது. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து குறைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது .
மேலும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் எடுத்து அதனை செயல் படுத்திடாத ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அதேபோல் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களை வைத்துக்கண்டு திரும்ப கொடுக்காமல் உள்ள வாடிக்கையாளர்கள் முகவரி தொலைபேசி எண்ணை கொடுத்தால் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் எடுக்காத ஆபரேட்டர்கள் தங்கள் அனலாக் பாக்கி நிலுவை தொகையை உடனடியாக செலுத்திட கேட்டுக்கொண்டார் . கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடந்த மூன்று மாதத்தில் செயல்பாட்டில் இல்லாத செட்டாப் பாக்ஸ் கலை செயலாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . நிலுவை தொகையை செலுத்தியவர்களுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் உடனடியாக எச்டி பாக்ஸ் வழங்க வேண்டும் என்றும் புதிய செட்டாப் பாக்ஸ்களை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் தங்கள் பகுதி வரை அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை பைபர் கேபிள் மூலம் அரசு செலவில் வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் கலந்து கொண்ட கேபிள் ஆபேரட்டர்கள் கேட்டு கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப உதவியாளர் செல்வம் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் அழகு சுந்தரம் வரவேற்றார். துரைராஜ் நன்றி கூறினார்.