புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தியதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் “மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பின்” ஆலோசனை கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் யூசுப் ராஜா தலைமையில் நடைபெற்றது. அதில் கடந்த 22 ஆம் தேதி இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் வீடுகளில் மத்திய பாஜக அரசின் ஏஜென்சியான என்ஐஏ மற்றும் இடி ஆகியவைகள் நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் சட்டத்திற்கு புறம்பாக மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்து  சோதனை என்ற பெயரில் அராஜகத்தை நிகழ்த்தி அதன் தலைவர்களை நூற்றுக்கும் மேற்பட்டோரை பலவந்தமாக கைது செய்து சென்றுள்ளனர். இதனை கண்டிக்கும் விதமாக மத்திய அரசின் என்ஐஏ மற்றும் அமலாக்க துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் செப்டம்பர் 28ம் தேதி மாலை 4 மணி அளவில் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேற்கண்ட கூட்டத்தில் ஜமாத்துல் உலமா,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ,பெரியார் அம்பேத்கார் மக்கள் இயக்கம் ,சமத்துவ மக்கள் கட்சி ,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா ,மனிதநேய ஜனநாயக கட்சி ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ,ஆம் ஆத்மி கட்சி ,புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி,சிபிஎம்எல்,விமன் இந்தியா மூவ்மெண்ட் ஆகிய அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 28ம் தேதி நடைப்பெறும் ஆர்ப்பாட்டத்திலும் இவர்கள் பங்கேற்பார்கள் என்றும் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பின் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 3