புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் புற்றீசல் போல பிரியாணி கடைகள் முளைத்து வருகிறது சாதாரண ஏழை முதல் ஓரளவு வசதி படைத்தவர்கள் வரை பிரியாணியின் சுவைக்கு அடிமையாகி மாதம் ஒரு முறையாவது பிரியாணி சாப்பிட்டு விட வேண்டும் என்ற ஆவலில் புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு பிரியாணி கடைகளில் மதிய உணவுக்காக நுழைகின்றனர்.
ஆனால் ஒரு சில கடைகள் தவிர்த்து பல்வேறு பெயர்களில் இயங்கும் கடைகளின் பிரியாணியில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக மாட்டு இறைச்சியை கலப்படம் செய்து விற்று வருகின்றனர். இந்த வகையான ஓட்டல்களில் உணவு கலப்பட தடுப்பு அதிகாரிகளோ மற்றும் நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்களோ முறையாக ஆய்வு செய்வதில்லை ரூபாய் 300 முதல் 350 வரை செலவு செய்து பிரியாணி தின்னும் பொழுது தான் தின்பது ஆட்டுக்கறிக்கு பதிலாக மாட்டுக்கறி என்பதை உணர்கின்றனர். இது குறித்து யாரிடம் புகார் செய்வது என பல நுகர்வோருக்கும் உணவு பிரியர்களுக்கு தெரிவதில்லை இந்த வகையில் பொதுமக்களை ஏமாற்றி ஆட்டுக்கறி என்ற பெயரில் மாட்டுக்கறி பிரியாணி விற்கப்படுகிறது.
மாட்டுக்கறி விற்பதில் தின்பதில் எந்த தவறும் இல்லை ஆனால் ஆட்டுக்கறி என்ற பெயரில் குறைந்த விலையில் மாட்டுக்கறியை வாங்கி ஆட்டுக்கறி பிரியாணி என்று பொய் சொல்லி பொதுமக்களுக்கு விற்று வருவது வேதனைக்குரிய விஷயமாகும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், மாவட்ட உணவு கலப்பட தடுப்பு பிரிவு ஆகியவை திடீர் சோதனை நடத்தி இந்த மோசடிகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில் யார் வேண்டுமென்றாலும் உணவு நிறுவனத்தை நடத்தி விடலாம் என்கிற அளவிற்கு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வீதிக்கு வீதி முளைத்திருக்கும் பிரியாணி கடைகளை முறைப்படுத்த வேண்டும் அவர்கள் சமையல் செய்யும் இடங்களையும் ஆய்வு செய்திட வேண்டும் பொருட்களின் தரம் குறித்து சோதனை செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை புதுகை வரலாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வைத்திட கடமைப்பட்டுள்ளது. ஏனெனில் பல இடங்களில் விற்பனையாகாத பிரியாணிகளை சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களுக்கு பிரியாணி கடை நடத்துபவர்கள் கொடுக்கும்போது நாய்களே சாப்பிடாமல் ஓட்டம் பிடிப்பது தொடர்கதையாகி வருவது தணிக்கதை.