புதுக்கோட்டைவெங்கடேஸ்வரா பள்ளியில் சிறுதானிய உணவுக் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா கொண்டாட்டம்

புதுக்கோட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் இணைந்துஉணவுத் திருவிழா கொண்டாடினர். இந்த நிகழ்வினை பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி துவங்கிவைத்தார். உணவுத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமானஉணவுப் பதார்த்தங்களை வீட்டிலிருந்து செய்து கொண்டுவந்திருந்தனர். 

சின்னஞ்சிறுகுழந்தைகள்உண்ணவேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாகசிறுதானியஉணவுகள்,தவிர்க்கவேண்டியஎண்ணெய் மற்றும் துரிதஉணவுகள்,நொறுக்குத் தீனிகள் பற்றியநாடகம் ஒன்றைநடித்துக் காட்டினர், உண்ணக்கூடியஉணவுப் பொருட்களைஒருஅறையிலும் தவிர்க்கவேண்டியஉணவுப் பொருட்களைஒருஅறையிலும் தனித்தனியேகாட்சிப் படுத்தியிருந்தனர், பார்வையிட்டபெற்றோர்களிடம் தாங்கள் கொண்டுவந்துகாட்சிப்படுத்தியிருந்தஉணவுப் பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றைசாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளையும்,உண்ணக்கூடாத பதார்த்தங்களின் பெயர்களையும் அவற்றைச் சாப்பிட்டால் உடலுக்குஏற்படும் தீமைகளையும் சிறப்பாக எடுத்துக்கூறிய குழந்தைகளை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

மழலைமாணவர்களின் உணவுக்கண்காட்சியைபள்ளியின் துணைமுதல்வர் குமாரவேல்,பள்ளியின் மனநலஆலோசகர் மார்ட்டின்,ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியப்பெருக்களும் ஏராளமான பெற்றோர்களும் கண்டுகளித்து உண்டு மகிழ்ந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைமுதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசிரியைகள் சிவதர்சினி,சுசிலா,உமாராணி, ராஜகுமாரிஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2