புதுக்கோட்டையில் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய சிறப்புக் குழந்தைகள் கலைத் திருவிழா

ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய சிறப்புக் குழந்தைகள் கலைத் திருவிழா புதுக்கோட்டையில் இன்று நடைப்பெற்றது.

புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய சிறப்பு குழந்தைகளுக்கான கலைத் திருவிழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  மகிழ்ந்திரு மகிழ்வித்திரு என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த விழாவில் மாவட்ட அளவிலிருந்து ஏராளமான சிறப்புக் குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு மாவட்ட துணைச் செயலாளர்  சிறப்புத் திட்டங்கள் கருணாகரன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினர்களாக சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்ட ஆளுனர் ஆனந்த ஜோதி, மாவட்ட செயலாளர் ஸ்பீக்கர் பேங்க். கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். 

கௌரவ விருந்தினர்களாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், ஆதிகாலத்து அலங்கார மாளிகை அருண், சுபபாரதி லியோ பெலிக்ஸ் லூயிஸ் வீரமணிகண்டன் சுந்தரம் பேக்கரி  சிறப்பு அழைப்பாளர்கள்  சர்வதேச செஸ் வீரர் ஏ.அங்கப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுகள் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆனந்த ஜோதி பேசும்போது “ சிறப்பு குழந்தைகளுக்கான விழாவை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். எல்லா இடங்களிலும் சிறப்புக் குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் ஏராளமாக கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது. இதுமாதிரி வெளியே அவர்களை அழைத்து வந்து விழாக்களில் கலந்துகொள்ளச் செய்யும்போது குழந்தைகளும் பெற்றோர்களும் வித்தியாசமான அனுபவங்களை பெறுகின்றனர். என்று குறிப்பிட்டார்.

கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும் போது “ சிறப்புக் குழந்தைகளான இவர்கள் தான் கடவுளின் குழந்தைகள். அவர்களை காணும்போது நமக்கு நெகிழ்ச்சியில் கண்கள் பணிக்கின்றது. கள்ளம்கபடமில்லமல் அவர்களை நம்மை அழைப்பதும், நம்மை தொட்டுப்பார்க்க ஆசைப்படுவதும், நம்மோடு கை குலுக்குவதும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள். இதுமாதிரி மாவட்டம் முழுவதும் இவர்களை அழைத்து விழா நடத்திட வேண்டும் என்று குறிப்பிட்டார். சிறப்பு குழந்தைகளுக்கு விளையாட்டுகளும், மேஜிக் நிகழ்ச்சியும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் நடத்தப்பட்டது. சிறப்பு குழந்தைகளுக்குப் பிடித்த பாப்கான், பஞ்சுமிட்டாய் போன்ற திண்பண்டங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக ரோட்டரி பிரேயர் மண்டல் ஒருங்கிணைப்பளர் ஆரோக்கியசாமி வாசிக்க மண்டல ஓருங்கிணைப்பளர் பீர்சேக் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அருணாச்சலம் தலைமையில் துணை ஆளுநர்கள் கவிதா, கதிரேசன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து ரோட்டரி சங்க தலைவர்களும் சிறப்பாக செய்தனர். விழாவில் சிறப்புத்திட்ட மாவட்ட செயலாளர் முரளி, மாவட்ட செயலாளர் சிறப்பு குழந்தைகள் திட்டம் லோகநாதன், மற்றும் ஏராளமான ரோட்டரி குழும உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்புக் குழந்தைகளை வாழ்த்தினர்.