புதுக்கோட்டையில் மௌண்ட்சீயோன் பள்ளியில் நடைபெற்ற சோழ மண்டல அளவிலான சதுரங்க போட்டி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

மௌண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சோழ மண்டல அளவிலான சதுரங்கப் போட்டி ஸ்ரீ சாய் சரவணா அகாடமியினரால் மௌண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டது.இப்போட்டியில் தஞ்சாவூர், மாயவரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர்  கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க விளையாட்டு குழுமச் செயலாளர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். சதுரங்கப் போட்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மௌண்ட்சீயோன் பள்ளிக் குழுமங்களின் தலைவர்  ஜோனத்தன் ஜெயபாரதன், தமிழ்நாடு சதுரங்கக்கழக இணைச் செயலாளர்கள் பாலகுணசேகரன் மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பல்வேறு கட்டமாக நிகழ்ந்த இப்போட்டியில் 9 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இமான், 9 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஆசிகா வர்ஷினி,11 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் மிதுன், 13வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் பிரேம் ராகவன், 15 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் அன்பு முத்தையா, மற்றும் அனைத்து வயதிற்குட்பட்டோர் பிரிவில் பால கௌசி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா மற்றும் மௌண்ட் சீயோன் பள்ளிக் குழுமங்களின் தலைவர் ஜோனத்தன் ஜெயபாரதன் ஆகியோர் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக சாய் சரவணா அகாடமியின் பொருளாளர் அங்கப்பன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

21 − 20 =