
புதுக்கோட்டை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி திருச்சி சாலையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஐந்து வயது முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200 மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர். .இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காரைக்குடி அப்போலோ ரீச் ஹாஸ்பிடல் சூப்பிரென்ட் டாக்டர் எல்.கோகுலகிருஷ்ணன் பதக்கங்கள் அணிவித்து பாராட்டினார், டெல்லி பப்ளிக் பள்ளி சேர்மன்,நாகராஜன் இயக்குனர் பார்கவி உள்ளிட்ட ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர், இப்போட்டிகளில் தகுதி பெற்ற மாணவ,மாணவிகள் எதிர்வரும் நவம்பர் 1 முதல் 5 வரை சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர், நிகழ்ச்சியினை புதுக்கோட்டை மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ஆர்.எம்.சிவராமன் ஏற்பாடு செய்திருந்தார்.