புதுக்கோட்டையில் மக்கள் நடமாட்டமிகுந்த இரண்டு இடங்களில் உள்ள மின்மாற்றிகளை உடன் மாற்றி அமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

 புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றி  ( டிரான்ஸ்பார்மர்  )  கம்பங்கள் மிகவும் பழுதடைந்துள்ளது.

மழை காலம் தொடங்கவிருக்கிறது.கொஞ்சம் வேகமாக காற்றடித்தால்கூட சாய்ந்த விடக்கூடய அபாய நிலையில் இருக்கிறது. சிமென்ட் கரையெல்லாம் பெயர்ந்து வெறும் இரும்புக் கம்பியிலேயே நின்றுகொண்டருக்கிறது. ராணியார்மேல்நிலைப்பள்ளி மாணவிகள்  இது வழியாகத்தான் போகிறார்கள்.

ராஜகோபாலபுரம் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் இந்த இடத்தைக் கடந்துதான் செல்லவேண்டும்.

  மக்கள் நலன் கருதி இந்த மின்மாற்றி கம்பங்களை மின்சார வாரியம் உடன் சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

இதே போல மகளிர் கல்லூரிக்கு போகும் பாதையில் உள்ள மின்மாற்றி கம்பங்களும் சேதமடைந்த நிலையிலேயே இருக்கிறது. மாணவிகள் நலன்கருதி உடன் அதையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமாய் பொதுமக்கள் மின்சார வாரியத்தைக் கேட்டுக்கொள்கிறார்கள்.சமீபத்தில்தான் தமிழக முதல்வர் ௹.625 கோடியில் புதிய மின்மாற்றிகள் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். என்பது குறிப்பிடதக்கதாகும்,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 6 =