
பொறியாளர் தின விழா கொண்டாட்டம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் தி சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் & பைப்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது.
பாரத ரத்னா மோக்க்ஷ குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் தி சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் & பைப்ஸ் இணைந்து பொறியாளர் தின விழாவை ஆலங்குடி ரோட்டில் உள்ள தி சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் & பைப்ஸ் ஷோரூம் கொண்டாடியது.
இந்த விழாவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார் தி சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் & பைப்ஸ் நிர்வாக இயக்குனர் காஜா மைதீன் வரவேற்புரை ஆற்றினார். பொறியாளர்கள் பஷீர் முகமது, வெங்கடாச்சலம் , மதிவாணன் முன்னிலை வகித்தார்கள் சிறப்பு விருந்தினராக மவுண்ட்சீயோன் பொறியியல் கல்லூரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ விருந்தினராக கட்டிட பொறியாளர்கள் சங்கத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொறியாளர்கள் கனகராஜ், பாரூக், ராஜதுரை, முரளி, சுப்பிரமணியன், ரவி, அரவிந்த், சாதிக், அறந்தாங்கி கலைச்செல்வம் மற்றும் பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பொறியாளர்கள் அனைவரையும் தி சிங்கப்பூர் எலக்ட்ரிகல்ஸ் & பைப்ஸ் சார்பாக கௌரவம் செய்யப்பட்டு வாழ்த்தினர். நன்றியுரை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பெர்லின் தாமஸ் வழங்கினார். நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெய் பார்த்திபன், அஜ்மீர் கான் மற்றும் தி சிங்கப்பூர் எலக்ட்ரிக்கல்ஸ் & பைப்ஸ் ஊழியர்கள் செய்திருந்தார்கள்.