புதுக்கோட்டையில் பகத்சிங் 115-ஆவது பிறந்ததினத்தையொட்டி 75 இடங்களில் உறுதிமொழி ஏற்பு

சுதந்திரப் பேராட்ட வீரர் மாவீரன் பகத்சிங்சின் 115-ஆவது பிறந்த தினம் நாடுமுழுவதும்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பகத்சிங்கின் 115-ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று 75 மையங்களில் மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்கப்பட்டதோடு 15 ஆயிரம் இளைஞர்கள் சங்கத்தில் இணைக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பகத்சிங்கின் உருவப்பட்டத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது, நிகழ்ச்சிக்கு மாணிக்கம் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் அ.குமாரவேல், தலைவர் எம்.மகாதீர், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், நகரச் செயலாளர் ஜெகன், முன்னாள் நகரச் செயலளார் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ராஜேஸ், குமரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் எம்.சின்னதுரை எம்எல்ஏ, எஸ்.சங்கர், ஜி.பன்னீர்செல்வன், முன்னாள் ஒன்றியச் செயலளர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர், அறந்தாங்கியில் எம்.கோபால் தலைமை வகித்தார், முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் மாவட்டத் தலைவர் ஆர்.கர்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவரங்குளம் ஒன்றியத்தில் பி.கனகராஜ் தலைமை வகித்தார், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், முன்னாள் ஒன்றியத் தலைவர்கள் எல்.வடிவேல், தரணிமுத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர், கறம்பக்குடி ஒன்றியத்தில் தினேஷ்  தலைமை வகித்தார், முன்னாள் மாவட்டத் தலைவர் த.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அரிமளம் ஒன்றியத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ப.சுமதி தலைமை வகித்தார், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வி.ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர், திருமயத்தில் கார்த்திக் தலைமை வகித்தார், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

31 − 27 =