புதுக்கோட்டையில் நாளை பவர் கட்- அதிகாரி அறிவிப்பு

புதுக்கோட்டை பழனியப்பா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 110/22 கேவி துணை மின்  நிலையத்தில் இருந்து செல்லும் 22 கேவி டவுன் ஐ பீடர் உயர் மின்னழுத்த பாதையில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அதிலிருந்து  மின் விநியோகம் செய்யப்படும் பழனியப்பா நகர், அபிராமி நகர், பெரியார் நகர், தைலாநகர், நரிமேடு, சமத்துவபுரம், சுப்பிரமணியன் நகர், வஉசி நகர், ராம்நகர், பாலாஜி நகர், சீனிவாசன் நகர், கண்ணன் நகர் ஆகிய இடங்களில் ஜனவரி 21-ஆம் தேதி நாளை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − 21 =