புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நளை(ஜனவரி 6)நடைபெறும் இலவச சித்த மருத்துவ முகாம் மூலிகை கண்காட்சியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட சித்த மருத்து அலுவலர் மரு.எம்.வனஜா தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.எம்.வனஜா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பில் 6 ஆவது தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாம் மூலிகை கண்காட்சி புதுக்கோட்டை சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நளை(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
முகாமில் உள் மருத்துவ சிகிச்சைகளான பொது மருத்துவம்,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,சுவாச நோய்,எலும்பு நோய்கள்,நரம்பு நோய்கள்,தோல் நோய்கள்,குழந்தையின்மைக்கான சிகிச்சைகளும் புறமருத்துவ சிகிச்சைகளான வர்மம், தொக்கணம்,பொடிதிமிர்தல்,மூலிகை ஆவி சிகிச்சை,ஒற்றடம்,அகச்சிவப்பு,கதிர்சிகிச்சை,நசியம் போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்படும்.எனவே இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.
முகாமினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தொடங்கி வைத்து விழா பேருரை ஆற்றுகிறார், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமை வகிக்கிறார்,புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா முன்னிலை வகிக்கிறார், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் கே.ராமு வாழ்த்துரை வழங்குகிறார் என தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.