புதுக்கோட்டையில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

புதுக்கோட்டையில் நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்   சார்பாக சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டுப்போட்டிகள்   நடைபெற்றது.

புதுக்கோட்டை நேரு யுவகேந்திரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்   சார்பாக சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள், திருவப்பூர் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் கருணைச்செல்வி தலைமை  வகித்தார். புத்தாஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அசோசியேஷன் நிறுவனர் சே.கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட குத்துச்சண்டை கழகத்தினுடைய தலைவர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் ,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்

இப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட இளைஞர்களும்,  பெண்களும் கலந்து கொண்டனர், இளைஞர்களுக்கு கபடி, வாலிபால், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் இளம்பெண்களுக்கு கோ-கோ , வளைபந்து ஓட்டப்பந்தயம் ,கயிறு தாண்டுதல், போன்ற போட்டிகளும் நடைபெற்றன. பாரம்பரிய விளையாட்டு பிரிவில் சிலம்பம் இடம் பெற்றது.கிளிக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன், மருதாந்தலை அரசு உயர்நிலைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம் , சிலம்ப ஆசிரியர் மாரிமுத்து, ஆகியோர் நடுவர்களாக இருந்து இப்போட்டிகளை வெகு சிறப்பாக நடத்தினர்,

பின்னர் பள்ளி  முதல்வர் சங்கீதா,நேரு யுவ கேந்திராவின்  தேசிய இளையோர் தொண்டர் வாசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  நேரு யுவ கேந்திராவின் தேசியத் தொண்டர் ராஜ்குமார் நன்றி கூறினார், விழா ஏற்பாடுகளை புத்தாஸ் வீரக்கலைகள் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − = 68