தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட அளவில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் இன்று (29.03.2023) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை, பொது சுகாதாரத்துறை, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மற்றும் இந்திய தர நிர்ணய அமைபனம் ஆகிய துறைகளில் இருந்து பொதுமக்கள், நுகர்வோர்களுக்கு மற்றும் மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டு நேரடி விளக்கங்கள் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினரால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு நுகர்வோர்களின் உரிமைகள் தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உணவுப் பொருள் வீணாவதை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், தவறான விளம்பரங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளல் போன்ற தலைப்புகளை மையமாகக் கொண்டு நடைபெற்ற கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களின் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். நன்முறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ நுகர்வோர் குழு அமைப்பினர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, இணை பதிவாளர்(கூட்டுறவு) ராஜேந்திரபிரஷாத், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், துணை இயக்குநர்(சுகாதாரம்) மரு.ராம்கணேஷ், திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.