திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கம்பன் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் கம்பன் கழக செயலாளர் சம்பத்குமார் துணை தலைவர்கள் எம் ஆர் எம் முருகப்பன், அருண் சின்னப்பா, பொருளாளர் கோவிந்தராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பாரதி, ராமசாமி, காடுவெட்டி குமார், கருணாகரன், முருகையன் உள்ளிட்ட ஏளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.