புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு, ”புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழா 2021 ஆம் ஆண்டில் அரசிதழில் பதிவு செய்யப்பட்டுள்ள 120 கிராமங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு விழாக்கள் நடத்தப்படவும், குறிப்பிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விழாக்கள் விதிமீறல்கள் ஏதுமின்றி நடத்தப்படுவதை கண்காணிக்க கோட்ட அளவில் குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர், கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உரிய முறையில் செயல்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிட்-19 நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்திடும் வகையில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை உரிய விதிமுறைகளின்படி சிறப்பாக நடத்தி முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 18