புதுக்கோட்டையில் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக இரத்ததான முகாம்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சங்கத் தலைவர் அசோகன் தலைமையில் இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வருகை தந்த அனைவரையும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத் தலைவர் மாருதி கண.மோகன் ராஜா வரவேற்றார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கச் செயலாளர் இப்ராஹிம் பாபு, பொருளாளர் பிரசாத், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கச் செயலாளர் முத்தன் அரசகுமார், நகர்மன்ற உறுப்பினர் ராஜா முஹம்மது, வருங்கால செயலாளர் ஓம்ராஜ், முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இரத்ததான முகாமினை துவக்கி வைத்தார் சக்திகணேஷ் இரத்த கொடையாளர் மற்றும் இரத்த ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் தலைமையில் இரத்த கொடையாளர்கள் சூரியபிரகாஷ், ராஜிவ், மதன் ஆகியோர் இரத்த தானம் செய்தனர் நிறைவாக சங்கப் பொருளாளர் நன்றி கூறினார்.