புதுக்கோட்டையில் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது முககவசம் அணிவது குறித்தும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

 புதுக்கோட்டை நகர போக்குவரத்து காவல் துறையும் வடக்கு ராஜவீதிலுள்ளஆதிகாலத்து அலங்கார மாளிகையும்  இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, கொரன விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி வாயிலாக நடைபெற்றது.

இந்த  நிகழ்ச்சியை , புதுக்கோட்டை   மாவட்ட  காவல்துறை  கண்காணிப்பாளர்                              நிஷா பார்த்திபன்  பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளை அனைவருக்கும் வழங்கி கலை நிகழ்ச்சியினை  தொடங்கி வைத்தார் .

 கலைக்குழுவினர்   தங்களது பிரச்சாரத்தில்  ஓட்டுனர்கள் மிகவும் கவனமாக வாகனங்களை  இயக்க வேண்டும். அனைவரும் தற்போது உள்ள காலகட்டத்தில் முக கவசம் அணிந்து மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும்.

சாலைகளில் முறையான விதிமுறைகளை  இயக்க வேண்டும் என்று கலைகுழுவினர் நடித்து  பிரச்சாரம்  செய்தனர்.

    நகர காவல் ஆய்வாளர்  குருநாதன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரான்சிஸ்மேரி, ஆதிகாலத்து அலங்கார  மாளிகை அருண் மற்றும் பணியாளர்கள்  போக்குவரத்து  உதவி காவல் ஆய்வாளர்கள் போக்குவரத்து   காவலர்கள்   ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து  கலைநிகழ்ச்சி கலை குழுவினர்கள் பிருந்தாவனம்,அண்ணாசிலை, பழையபேருந்து நிலையம் ஆகிய இடங்களில்  சாலை பாதுகாப்பு முககவசம் அணிவது குறித்தும்  நடித்து காட்டி  பிரச்சாரம்  செய்தனர், ஏற்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர்,  ஆதிகாலத்து அலங்கார  மாளிகையினர்  சிறப்பாக செய்தனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + = 9

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: