புதுக்கோட்டையில் சதுரங்கப் போட்டி தங்கம் மூர்த்தி தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டையில் நடைபெறும் 70 ஆவது சதுரங்கப் போட்டி தொடர்ந்து மூன்று நாட்களாக சிறப்பாக நடைபெற்றது, மூன்றாவது நாள் காலை ஐந்தாவது சுற்று விளையாட்டுப் போட்டியினை புதுக்கோட்டை    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி தொடங்கி வைத்தார்.

அதேபோல் மதியம் ஆறாவது சுற்றினை மூவார் முருகன் மண்டபத்தின் நிர்வாக தலைவர் எஸ்.டி.ராமநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் துணைச் செயலாளர் எஸ்.அப்துல்நசீர் தொடங்கி வைத்தனர், போட்டியில்  மற்றும் சதுரங்க கழக வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இந்நிகழ்வில் முதன்மை நடுவர் ஆனந்தபாபு மாவட்ட சதுரங்க கழகத்தின் நிர்வாகிகள் பேராசிரியர் கணேசன், அடைக்கலவன், அங்கப்பன், டாக்டர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள்  பங்கு பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 25 = 27