தமிழ்நாடு முழுவதும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கேபிள் ஆபரேட்டர்கள் ரத்ததான முகாம் நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாகவும் அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர் பொது நலச் சங்கம் சார்பில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாவட்டத் தலைவர் கண்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் அறந்தாங்கி சக்திவேல் முன்னிலையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர், கேபிள் டிவி சங்கர் மாவட்ட பொருளாளர் கணபதி மற்றும் சங்க நிர்வாகி பார்த்திபன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கேபிள் ஆபரேட்டர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.