புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி

  புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி   புதுக்கோட்டை,பிப்.15-   புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட பள்ளி மேலாண்மைக்குழு மாவட்டக் கருத்தாளர்களுக்கான  2 நாள் உண்டு உறைவிடப்பயிற்சி ஜெ.ஜெ.அறிவியல்   கலைக் கல்லூரியில் நடைபெற்றது.   பயிற்சிக்கு  வந்திருந்த அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வரவேற்றுப் பேசினார், மேலும் பயிற்சியில் கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளை அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன முதல்வர் பெ.நடராஜன் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மெ.கோவிந்தராஜ்  (பொறுப்பு)  அறந்தாங்கி , நா.ரவிச்சந்திரன் ( பொறுப்பு) புதுக்கோட்டை, செ.ஆண்டனி ( பொறுப்பு)இலுப்பூர்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.    பயிற்சியில் கலந்து கொண்ட மாவட்டக் கருத்தாளர்களுக்கு பள்ளிக்கும், சமூகத்திற்கும் இடையிலான உறவு,சமூக கட்டமைப்பும் கல்வியின் வரலாறும்,குழந்தைகளின் உரிமைகள் பங்கேற்பு மற்றும் மாணாக்கர் பேரவை,பள்ளி மேம்பாட்டுத்திட்டம் ,பள்ளியை மேம்படுத்த பல்துறை ஒத்துழைப்பு பெறுதல்,தலைமை ஆசிரியர்களின் அனுபவ பகிர்வு,செயல்திட்டம் வகுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.   இப்பயிற்சியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 105 ஆசிரியர்கள்,சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 74 ஆசிரியர்கள்,முதன்மைக் கருத்தாளர்கள் 7 பேர்,பயிற்சியின் வழிகாட்டுநர்கள் 8 பேர் என மொத்தம் 194 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெ.சுதந்திரன் நன்றி கூறினார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

47 + = 49