புதுக்கோட்டையில் எய்டு இந்தியா அமைப்பின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில். எய்டு இந்தியா  அமைப்பின் மூலம்  கோவிட்-19 பாதிப்பால் பெற்றோர்களை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

நிகழ்வில்  புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை வகித்து பேசினார்.அப்போது ”எய்டு   இந்தியா அமைப்பின் மூலம்  ஒவ்வொரு மாதமும் கோவிட்-19 நோயால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் வறுமையில் இருக்கக்  கூடாது என்று  அவர்களுக்குத் தேவையான அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள் . இவர்களது தொடர்ச்சியான  பணியானது நம்  மாவட்டத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது” என்றார்.

மேலும் “விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சக்திவேல் ,  வட்டார செயலாளர் ராமகிருஷ்ணன் , தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் பாலா ஆகியோர்  கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

40 − 38 =