புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் அத்துமீறும் சமூகவிரோதிகள் காவல்துறை கண்காணிப்பை தீவிர படுத்த கோரிக்கை

புதுக்கோட்டையில் நகரின் முக்கிய பகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்புகள் முழுமையாக குறைத்து விட்டதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உதாரணத்திற்கு நேற்று இரவு புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு ரவுண்டானாவில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் ரவுண்டானா வரையில் இருந்த பள்ளி, கல்லூரிகள் மற்றும் இதர விளம்பர பேனர்கள் சமூகவிரோதிகள் சிலரால் திட்டமிட்டு பத்துக்கு மேற்பட்ட பேனர்கள் சிதைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கூறுகையில்:- மாவட்ட காவல்துறை பணியானது கடந்த இரண்டு மாத காலமாக முற்றிலும் செயலிழந்து மக்கள் அளிக்கும் புகாருக்கும் தீர்வு அளிக்காமல் வழக்கமான நடைமுறைகளிலும் கவனம் செலுத்தாததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற தொடங்கியுள்ளது. நகரின் எந்த பகுதிகளும் காவல்துறையினர் ரோந்து செல்வதில்லை காவல்துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அவை செயல்படுவதும் இல்லை, நகரில் 80 சதவீத மின்கம்பங்களில் மின் விளக்குகள் இருக்கின்றன ஆனால் தேவையான நேரத்தில் அவை எரிவது இல்லை இது சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து விடுகின்றது. இது போன்ற குற்றச்சம்பவங்கள் தொடராமல் இருக்க பிளக்ஸ் பேனர்களை சேதப்படுத்திய நபர்கள் யார் என்பது ஜல்லிக்கட்டு காளை மற்றும் ரயில்வே ரவுண்டானா ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறிய முடியும் அதை உடனடியாக கண்டறிந்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கும் பட்சத்திலும் காவல்துறை ரோந்து பணிகளை தீவிரப் படுத்தும் பட்சத்தில் மட்டுமே குற்ற சம்பவங்களை குறைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =