புதுக்கோட்டையில் அரசு ஊழியர் சங்க எழுச்சிநாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் இருபதாம் ஆண்டு எழுச்சிநாள் கருத்தரங்கம் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் க.குமரேசன், வீ.ஏ.கே.மனோகரன், சு.குணசேரகன், ஜி.என்.பாலமுருகன், அ.கருப்பையா, அ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழமைச் சங்க நிர்வாகிகள் லெ.பிரபாரகன், அ.மணவாளன், ஆர்.சுப்பிரமணியன், மா.குமசேரன், கு.சத்தி உள்ளிட்டோர் வாழத்திப் பேசினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மலர்விழி கருத்துரை வழங்கினார். கருத்தரங்கில் கலந்துகொண்டு ‘பறிக்கப்பட்ட உரிமைகளின் வலியும், விட்டுவிடாத போராட்டங்களின் வலிமையும்’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் இரா.ரெங்கசாமி வரவேற்க, ஆ.பழனிச்சாமி நன்றி கூறினார். கருத்தரங்களில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + = 20