புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் இந்தாண்டும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
புதுக்கோட்டைமாவட்ட வர்த்தக கழகம் பல வருடங்களாக தொடர்ந்து நடத்தி வரும் இஃப்தார் ( நோன்பு திறப்பு)விருந்து நிகழ்ச்சி வர்த்தக கழக சில்வர் ஹால் திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. வர்த்தக கழக தலைவர் சதர்ன் எம்.சாகுல்ஹமீது தலைமையில் செயலாளர் சாந்தம் எஸ்.சவரிமுத்து வரவேற்புரையாற்ற கூடுதல் செயலாளர் ஆர்.சம்பத்குமார் விழாதொகுத்து வழங்கினார்.

அரபிக்கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் எஸ்.அப்துல் ஜப்பார் பாகவி,திரு இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை எ.சவரிநாயகம் அடிகளார்,திலகவதியார் ஆதீனம் தயானந்த சந்திரசேகர் சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர் எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி நோன்பு திறக்கும் துஆ ஓதினார், மாவட்ட வர்த்தக கழக நிர்வாகிகள் ஆர்.சேவியர்,ஆலங்குடி எ.டி.மன்மோகன்,பரம்பூர் எம்.முகம்மது பாருக், எஸ்.ராஜ்குமார்,பொன்னமராவதி எஸ்.கே.எஸ்.பழனியப்பன்,எஸ்.தியாகராஜன்,ஜெ.ஜாகிர்உசேன்,மற்றும் இனைப்பு சங்க நிர்வாகிகள்,எ.எம்.எஸ்.இப்ராஹிம் பாபு,நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகம்மது,பெரிய பள்ளி செயலாளர் ராஜா தாஜ்முகம்மது,ஒப்பந்தகாரர் பண்ணீர் (எ)சாகுல்அமீது,மற்றும் வர்த்தக பிரமுகர்கள்,ரோட்டரிசங்க நிர்வாகிகள்,திரளாக கலந்து கொண்டனர் ,மாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவர்கள் எஸ்.தியாகராஜன்,ஆர்.வைரவன்,கேஎல்கேஎஸ் ராஜாமுகம்மது,கே.எஸ்.முகம்மது இக்பால்,துணைச்செயலாளர்கள் எ.கே.ஹபிபுல்லா,கே.திருப்பதி,ஆர்,ஆரோக்யசாமி,பி.எல்.பசுபதி,ஆர்.விவேகானந்தன்,எஸ்.ஹெச்.சையதுநசீர்,எம்.சையதுஇப்ராஹிம்,அருணாச்சலம்,எம்.பூபாலன்,பி.பிரகாஷ் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க, ஆரம்பமாக மாஸ்டர் எ.முகம்மதுஅஸ்லம் கிராஅத் ஓத மாவட்ட வர்த்தக கழக பொருளாளர் எஸ்.கதிரேசன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

