புதுக்கோட்டை ஜெ.ஜெ கலை அறிவியல் கல்லூரியும் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி? என்ற தலைப்பில் மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட பொருளாதாரப் பாதுகாப்புப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் வழிகாட்டினார், மேலும் அவர் தம் வழிகாட்டலில் பொதுவாக மக்கள் போட்டித் தேர்வுகள் என்றால் டிஎன்பிஎஸ்சி என்று நினைக்கிறார்கள். எஸ்எஸ்சி என்று மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளும் நடத்தப்படுவதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
போட்டித் தேர்வுகளுக்குக் கடின உழைப்புடன் புத்திக் கூர்மையுடன் மீண்டும் மீண்டும் படித்தால் மனதில் உறுதியாகப் பதியும் என்று கூறினார் எனவே, நீங்கள் தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து உயரிய பதவிகளை அடைவதை உங்களது தனிவளர்ச்சிக்காக என்று கொள்ளாமல் பொதுநல நோக்கோடு பெறுவதன் மூலம் நாட்டிற்கும் வீட்டிற்கும் இக்கல்லூரிக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என்று வழிகாட்டினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் கவிதா சுப்பிரமணியன் தனது தலைமை உரையில் எழுந்திரு விழித்திரு உன் இலச்சியம் அடையும் வரை தொடர்ந்து செயல்படு என்ற விவேகானந்தரின் பிறந்த நாளை தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அந்த இனிய நாளில் இந்நிகழ்ச்சி பொருத்தமானதும் அர்த்தமுடையதும் ஆகும் என்று கூறினார். கல்லூரி முதல்வர் ஜ.பரசுராமன் வாழ்த்தினார், புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத்தின் தலைவர் லெட்சுமி அண்ணாமலை வரவேற்றார், தமிழ்த்துறைத் தலைவர் தயாநிதி நன்றியுரைக் கூறினார், வணிகவியல் துறைத்தலைவர் அடைக்கலவன், மகாராணி ரோட்டரி சங்கத்தின் ராஜலெட்சுமி, செயலர் லெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர், வணிகவியல் மற்றும் தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் பயன்பெற்றனர்.