புதுக்கோட்டைஅருகே 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய இருவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம்

புதுக்கோட்டைமாவட்டம், கணேஷ்நகர் காவல் சரகத்தில்  கடந்த 27.09.2021–ம் தேதி சேங்கைத்தோப்பைச் சேர்ந்தசெந்தில்குமார் மகன் கணேசன் (32) என்பவர்  7ம் வகுப்புபடிக்கும் சிறுமியை  மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இதனால் அச்சிறுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தற்கொலைக்கு தூண்டியதாகவும், இதற்க்கு காரணமான கணேசன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தசிறுமியின் தாயாரான சூரியகலா ஆகிய இருவர் மீதும் சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகளின் மீது கணேஷ் நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுகடந்த 06.11.2021-ம் தேதிகுற்றபத்தரிக்கைதாக்கல் செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் மீதுசுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று 09.06.2022-ம் தேதி மகிளாநீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்த இவ்வழக்கில்மேற்படி கணேசன் என்பவருக்கு 10 வருடம் சிறைதண்டனை மற்றும் ரூ.1,00,000-அபராதமும்,மெலும் 10 வருடம் சிறைதண்டனையும்ரூ.1,00,000 அபராதமும், மேலும் சாகும் வரை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

சூரியகலா என்பவருக்கு 10 வருடம் சிறைதண்டனையும் ரூ.1,00,000 அபராதமும், சாகும் வரை ஆயுள் தண்டனையம் மேற்படிதண்டனையை இருவரும் தனித்தனியேஅனுபவிக்கவேண்டும் எனவும் நீதிபதி  சத்யா உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை அரசு தரப்பு வழக்கறிஞர்  யோகமலர் சிறப்பாக நடத்தியுள்ளார். மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன்விசாரணை செய்த காவல் ஆய்வாளர் அழகம்மாள் மற்றும் நீதிமன்ற பணிக்கான தலைமைக்காவலர்  அனுராதாஆகிய இருவரையும் புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர்  நிஷா பார்த்திபன் வெகுவாக பாராட்டினார். தீர்ப்புக்குப் பின் குற்றவாளிகள் கணேசன் என்பவரை திருச்சி மத்திய சிறையிலும், சூரியகலா என்பவரை திருச்சி  மகளிர் கிளைச் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

73 − = 67