புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் கல்வி கண்காட்சி புதுக்கோட்டையில் இன்று தொடங்கியது

மாணவர்களின் கலை திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஓவிய போட்டிகளுடன் கல்வி கண்காட்சி தொடங்கியது. விழாவில் அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு வரலாற்று நாயகர் விருதினை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

 புதுக்கோட்டையி ல் புதுகை வரலாறு நாளிதழ் நடத்தும் நான்காம் ஆண்டு மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கி (மே29) நாளை நிறைவடைகிறது. புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள விஜய் பேலஸில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த கண்காட்சியில் முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. புதுகை வரலாறு நாளிதழ் சமூக சேவையுடன் கல்வி சேவை யி லு ம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இக்கண்காட்சியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரபலமான கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவகல்லூரி, பாலிடெக்னிக், கணினி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுவதோ டு, அவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த மாபெரும் கல்வி கண்காட்சி இன்று மே- 28 தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி , நாமக்கல், கோவை , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இன்றைய தொடக்க விழா நிகழ்வில் புதுகை வரலாறு நாளிதழின் நிறுவனர் & ஆசிரியர் சு.சிவசக்திவேல் வரவேற்புரையாறினார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை நகர்மன்ற தலைவி திலகவதி செந்தில் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக புதக்கோட்டை நகர் மன்றத்தலைவர் திலகவதி செந்தில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசுகையில், புதுகை வரலாறு நாளிதழ் சமூக சேவையுடன் சேர்த்து கல்வி சேவையிலும் அதிக கவனம் வருவது சிறப்பானது. மாணவ செல்வங்களாகிய உங்களுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. அப்படிப்பட்ட அறிய வாப்பினை பயன்படுத்தி உங்கள் சந்தேகங்களை தயக்கமில்லாமல் தைரியத்துடன் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். என்ன படிக்க வேண்டும், என்ன துறையில் முன்னேற வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காலம் பொன் போன்றது என்று அனைவரும் கூறுவர். ஆனால் காலம் உயிர் போன்றது. காலத்தை விரயம் செய்யக்கூடாது. கல்வி தான் நம் நாட்டின் மிகப்பெரிய சொத்து என்று நினைப்பவர் நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது அனைவரும் அறிந்த, தெரிந்த விஷயம். இதனை மெய்பிக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தேதி புதுமையான திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் உலகை வெல்லும் இளைய தமிழகம். என்ற நோக்கத்தில் ஆண்டிற்கு 10லட்சம் மாணவர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில் திறமையில் மேம்படுத்தி நம் நாட்டிற்கு வழங்குதல். பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு, முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு நம் தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது என்றார்.

எஸ்.ஆர் புளு மெட்டல்ஸ் குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன், பேக்கரி மஹராஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அருண் சின்னப்பா, விஜய் வணிக வளாகத்தின் நிர்வாக இயக்குனர் முருகானந்தம், முத்து மீனாட்சி மருத்துவமனை நிர்வா க இயக்குனர் டாக்டர் பெரியசாமி, கே.எம்.எஸ் ஹக்கீம் நிர்வாக இயக்குனர் சையது இப்ராஹிம், பார்வதி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நாளான இன்றைய நிகழ்வில் தமிழ்நாட்டில் பல்வேறு சமூக அமைப்புகளில் பல்வேறு சேவைகளை செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு சேவை செம்மல் எனப் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர். இரண்டாவது நாளான நாளை நடைபெறும் நிகழ்வில் பல்வேறு சமூக பணிகளை இந்த சமூகத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள சமூக ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களுக்கு வரலாற்று நாயகர் விருதினை த மி ழ க சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கி கௌரவிக்க உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 67 = 76