புதுகை வரலாறு நாளிதழ் செய்தி எதிரொலி -அக்னியாறு துவார் பெரிய ஏரி வாய்க்கால் தூா்வாரும்  பணி துவங்கியது 

புதுகை வரலாறு நாளிதழ் செய்தி எதிரொலியால் அக்னியாறு துவார் பெரிய ஏரி வாய்க்கால் தூா்வாரும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வக்கோட்டை தாலுகா துவார் பெரிய ஏரிக்கு அய்யங்காடு அக்னியாறு தடுப்பணையிலிருந்து வாய்க்கால் வழியாக தண்ணீா் வந்து இந்த பெரிய ஏரி மூலமாக 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனா்.ஒருமுறை ஏரி நிரம்பினால் மூன்று போக விவசாயம் செய்யும் அளவுக்கு போதிய நீரை தேக்கி வைக்கும் பெரிய ஏரியாகும், வரத்து வாய்க்கால் மற்றும் பெரிய ஏரியில் கருவேலமரங்கள் மற்றும் செடிகள் ஆக்கிரமித்து வருகிறது.

கடந்த வருடங்களில் போதிய மழைபெய்தும் நீா் வரத்து சரிவர வராததாலும் ஏரியில் தண்ணீா் நிரம்பாமலும் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியுற்றனா்.இது குறித்த புதுகை வரலாறு நாளிதழ் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தது, புதுகை வரலாறு நாளிதழ் செய்தி எதிரொலியால் தற்போது முதற்கட்ட பணியாக அய்யங்காடு அக்னியாறு தடுப்பணையிலிருந்து துவார் பெரிய ஏரிக்கு தண்ணீா் வரும் வாய்க்கால் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் திட்டம் ரூபாய் 23இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமைப்பு செடிகள் அகற்றப்பட்டு வாய்க்கால் தூா் வாரப்பட்டு கரைகள் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வாய்க்கால் தூா்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணியை நிறைவேற்றிய தமிழக முதல்வா் மற்றும் அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட புதுகைவரலாறு நாளிதழுக்கும் விவசாயிகள் தங்கள்  நன்றியை தெரிவித்தனா், மேலும் அடுத்தகட்டமாக  துவார் பெரிய ஏரியில் வனத்துறை மூலம் நடப்பட்ட நாட்டு கருவேலமரங்களை அப்புறப்படுத்தி தூா்வார கரைகளை பலப்படுத்திட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

64 − 62 =