புதுகை வரலாறு நாளிதழின் கோரிக்கை எதிரொலியாக புதுக்கோட்டை நுகர்வோர் நீதி மன்ற ஆணையத்திற்கு புதிதாக தலைவர், நீதி சார்ந்த உறுப்பினர், நீதி சாரா உறுப்பினர் குழு நியமனம்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதி மன்றங்களில் செயல்படும் மாவட்ட நுகர்வோர் நீதி மன்ற குறைதீர் ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஓராண்டுக்கு மேல் நியமிக்கப்படாததால் அந்தந்த மாவட்டங்களில் நுகர்வோரின் கோரிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு மாவட்டம் தோறும் சுமார் 300க்கு மேலான வழக்குகள் தீர்ப்பினை எதிர்நோக்கி உள்ளதால் சட்டத்துறை அமைச்சர் ச.ரகுபதி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இவ்வாண்டு ஜனவரி 14ல் கோரிக்கை விடுக்கப்பட்து.

அதன் எதிரொலியாக தற்போது புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு தலைவராக நீதிபதி க.மோகன்தாஸ், நீதித் துறை சார்ந்த உறுப்பினராக எஸ்.சுகுணாதேவி, நீதித் துறை சாராத உறுப்பினராக ஏ.அழகேசன் ஆகியோரை தமிழக அரசு நியமித்துள்ளது. புதுகை வரலாறு நாளிதழின் கோரிக்கையின் படி விரைந்து நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசுக்கும் சட்ட அமைச்சருக்கும் புதுகை வரலாறு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

புதுக்கோட்டை நியூ கோல்டன் நகரை சார்ந்த அ.ஜனார்தனம் புதுக்கோட்டை மாவட்ட குறைதீர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி க.மோகன்தாஸ், நீதித் துறை சார்ந்த உறுப்பினரான எஸ்.சுகுணாதேவி,  நீதித் துறை சாராத உறுப்பினரான ஏ.அழகேசன் ஆகியோரை சந்தித்து தன் சார்பிலும் புதுகை வரலாறு சார்பிலும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 8 = 11