புதுகை வரலாறு செய்தி எதிரொலி புதுக்கோட்டை வார சந்தை தினசரி காய்கறி விற்பனை வளாகமாக மாறப்போகிறது நகர்மன்ற தலைவர் ஆய்வு

புதுகை வரலாறு செய்தி எதிரொலி புதுக்கோட்டை வார சந்தையில் 160 கடைகளுடன் ஒருங்கிணைந்த தினசரி காய்கறி விற்பனை வளாகம் ரூ.6.45 கோடி செலவில் அமையவுள்ளது.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் பின்புறமாக அமைந்திருக்கும் வார சந்தையானது சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு வெள்ளிக்கிழமை தோறும் மாவட்ட முழுவதும் இருந்து வரக்கூடிய பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற காய்கறி மற்றும் இறைச்சி வகைகளை குறைந்த விலையில் வாங்கிச்செல்வது வழக்கம். ஆனால் இந்த பகுதியானது சுகாதாரமற்ற, பாதுகாப்பு இல்லாத பகுதியாக இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இதனை நாம் பலமுறை புதுகை வரலாறில் செய்தியாக வெளியிட்டு அரசின் கவனத்தை ஈர்த்து வந்தோம் இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தையில் ரூபாய் 6.45 கோடி செலவில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த தினசரி காய்கறி வளாகம் அமைக்கப்படவுள்ளதாக ஏற்கனவே நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்.

ஆய்வில் தலைவர் திலகவதி செந்தில் துணைத் தலைவர் லியாகத்அலி ஆணையர் நாகராஜ் பங்கேற்பு

அதனை உறுதிப்படுத்தும் விதமாக பணிகள் தொடங்குவதற்கான திட்ட வரைபடத்துடன் முதற்கட்ட ஆய்வு பணிகள் நகர்மன்றத்தலைவர் தலைவர் திலகவதி செந்தில், துணைத் தலைவர் லியாகத்அலி, ஆணையர் நாகராஜ் ஆகியோரது மேற்பார்வையில் இன்று நடைப்பெற்றது. 160 கடைகளுடன் அலுவலக அறை, நான்கு புறமும் நுழைவாயில், குடிநீர் வசதி, காய்கறி இருப்பு அறை, தொழிலாளர்கள் ஓய்வு அறை, கழிப்பறை, உணவகம் ஆகியவையும் அமைகிறது. இதற்கான பணிகள் இந்த மாதத்தில் பூமி பூஜையோடு தொடங்கப்பட்டு சில மாதங்களில் முடிவு பெறும் வகையில் விரைந்து நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்

நகராட்சிக்கு சம்பந்தமில்லாத பலர் வியாபாரிகள் போர்வையில் இடைத்தரகர்கள் பலரை நம்பி அவர்களுக்கு கையூட்டு கொடுத்து பல ஆண்டுகளாக நகராட்சி வாரச்சந்தையில் தொழில் செய்வது வருவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அதுபோல் சாக்குப் போக்கு சொல்லும் நபர்கள் அதிக அளவில் வாரச்சந்தை அமைய உள்ள இடத்தில் தங்களின் அஸ்திவாரத்தை ஸ்ட்ராங்காக போட்டுள்ளதால் நகராட்சியின் இந்த திட்டப்பணி புதுகை நகர மக்களுக்கு இனி வரும் பல நூற்றாண்டுகளுக்கு பலன் கொடுக்காமல் போக வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகம் உரிய விசாரணை செய்து உண்மையான எந்த வியாபாரியும் பாதிக்கப்படாதவாறும் அரசு சொத்தை முழுமையாக மீட்டு திட்ட பணியை நிறைவேற்றி அதன் மூலம் நகராட்சி நிர்வாகத்தின் வருவாயையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என புதுகை வரலாறு இந்த பதிவின் மூலமாக வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − 80 =