புதுகை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு குழந்தைகள், இல்லத்தரசிகள், முதியோர் கடும் அவதி தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இல்லத்தரசிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் விற்கும் முகவர்கள் 50 லிட்டர் ஆவின் பால் வந்த நிலையில் தற்போது எங்களுக்கு 10 லிட்டர் தான் வருகிறது என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அறந்தாங்கி, கறம்பக்குடி, கீரனுார், திருமயம், இலுப்பூர், கந்தர்வக்கோட்டை, விராமலிமலை, ஆலங்குடி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவுகிறது. புதுகை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இதே போல் ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு முக்கிய இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பால் விற்பது மட்டுமல்லாமல் டீ காஃபியும் விற்பனை நடந்து வருகிறது. இதனால் பால் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புதுகை மாவட்டத்தில் ஒவ்வொரு பால் முகவர்களும் நாள்தோறும் பால் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இவர்களிடம் அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேரிடையாக பால் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவது ஆவின் பாலைத்தான். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆவின் பாலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் ஆவின் பால் விற்போர் குறைந்த அளவிலேயே பால் வருகிறது. தேவைக்கேற்ப பால் வராததால் மக்களுக்கு சரிவர வழங்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் கூறுகையில், உதாரணத்திற்கு 50 லிட்டர் பால் வாங்கி விற்று வந்த நிலையில் தற்போது 10 லிட்டர் பால் தான் தருகின்றனர். இதுகுறித்து கேட்டால் ஆவின் ஊழியர்கள் சரிவர பதில் சொல்வதில்லை. மக்களுக்கு சரிவர நாங்கள் ஆவின் பால் தர முடியாததால் எங்கள் மேல் மக்கள் எரிச்சலடைகின்றனர். நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை, என்றனர். புதுகை மாவட்டத்தில் ஆவின் தட்டுப்பாடு காரணமாக தனியார் பால் பாக்கெட் அதிகம் விற்பனையாவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து புதுகை மாவட்ட ஆவின் பொது மேலாளரிடம் (7373780222 என்ற மொபைல் எண்ணில்) புதுகை வரலாறு சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஆவின் பால் தங்குதடையின்றி விற்பனையாகிறது. எந்த முகவருக்கு பால் குறைவாக வருகிறது என்று சொன்னால் நேரில் பார்த்து உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆவின் நிறுவனம் தனியாரை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்படுவதாக சமீப காலமாக புகார் எழுந்து வருகின்றது. அது நமது கள ஆய்விலும் தெரிய வருகிறது. தனியாரை விட ஆவினில் விலை குறைவு என்பதால் மக்கள் பால் வாங்கச் சென்றால் எந்த ஆவின் முகவரிடமும் காலை 8 மணிக்கு எல்லாம் கூட பால் இருப்பு இல்லாமல் பற்றாக்குறையே நீடிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தங்கு தடையின்றி ஆவின் பால் கிடைத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 + = 95