புதுகை பஸ் ஸ்டாண்டில் தொடரும் டூவீலர் திருட்டு பாதுகாப்பு இல்லாததால் மக்கள், பயணிகள் அச்சம்!

புதுக்கோட்டை நகரின் இதயப்பகுதியில் பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ளது. இங்கு நிறுத்தப்படும் டூவீலர் வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போவதால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அச்சத்தில் உள்ளனர்.

புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டுக்கு தஞ்சை, திருச்சி, கருர், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் இறங்கி, ஏறிச் செல்கின்றனர்.

பஸ் ஏற வருபவர்களை வழியனுப்பி வைக்க அவர்கள் இருக்கும் இடங்களில் இருந்து அவசரத்திற்கு உறவினர்கள் டூவீலர்களில் வருகின்றனர். அருகில் நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்ப்பதற்குள் டூவீலர் மாயமாகி விடுகிறது. பதறியடித்து அங்கும், இங்கும் தேடி அலைந்து விட்டு சிலர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கின்றனர். சிலர் எப்படியாவது டூவீலர் கிடைத்து விடும் தேடி கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் செல்கின்றனர்.

புதுகை பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே சி.சி.டி.வி., காமிரா நிறுவப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள கண்ட்ரோல் புத்  போலீஸார் அவ்வப்போது ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் போலீஸார் அவ்வப்போது காணாமல் போய்விடுகின்றனர். இதனால் திருட்டு சம்பவத்தை கண்காணிக்க முடியாமல் போய்விடுகிறது.

சமீபத்தில், புதுகை சமத்துவபுரம் உழைப்பாளர் தெருவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் டி.என்.55.பி.சி.0088 என்ற எண்ணுள்ள ஹீரோ ஹோண்டோ ஸ்பிளன்டர் வண்டியை திருச்சி பஸ் நிறுத்தும் இடத்தின் அருகில் நிறுத்தியிருந்த நிலையில் டூவீலர் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுகை டவுன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

புதுகை டவுன் போலீஸார் அதிக கவனம் செலுத்தி பஸ் ஸ்டாண்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாரை 24 மணி நேரமும் 3 சுற்றுகளாக பணியில் அமர்த்தி மக்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதுடன், டூவீலர் திருட்டு, செயின் பறிப்பு, பிக்பாக்கெட் போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 74 = 80