புதுகை அரசு ஐ.டி.ஐ.,ல் செயல்முறை பயிற்சி முகாம்

சென்னை ஹோண்டா இந்தியா பவர் ப்ராடக்ட் லிமிடெட், புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து செயல்முறை பயிற்சி முகாம் முதல்வர் ராமர் வழிகாட்டுதலின் படி பயிற்சி அலுவலர் மனோகரன் தலைமையில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

அனைவரையும் துணைப் பயிற்சி அலுவலர் யோகச்சந்திரன் வரவேற்றார். துணைப் பயிற்சி அலுவலர் சௌந்தராஜன், இணை பயிற்சி அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை கே.பி.அண்டு கோ ஹோண்டா விற்பனையாளர் அசோகன், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்க தலைவர் மோகன் ராஜா, சர்வீஸ் இன்ஜினியர் ஸ்ரீராம், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி முகாமில், துணைப் பயிற்சி அலுவலர் காத்தலிங்கம், இணைப் பயிற்சி அலுவலர் அன்பரசன் மற்றும் பயிற்சி அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முகாமில், காணொலி பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 4 =